ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மீண்டும் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் ஏமாற்றமே மிஞ்சும்! தெமியாங் சட்டமன்றத் தொகுதியில் டான்ஸ்ரீ கேவியஸ் பேச்சு

  மீண்டும் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் ஏமாற்றமே மிஞ்சும்! தெமியாங் சட்டமன்றத் தொகுதியில் டான்ஸ்ரீ கேவியஸ் பேச்சு

  20/03/2017

  img img

  தெமியாங், மார்ச் 20: வரும் 14ஆவது பொதுத் தேர்தலிலும் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் தொடர் ஏமாற்றம் ஏற்படுமே தவிர, ஒருபோதும் ஏற்றம் இருக்காது என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் நினைவுறுத்தினார். 

  ஏறக்குறைய இன்னும் ஓராண்டு காலகட்டத்திற்குள் 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது மிக முக்கியமான ஒன்று என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். காரணம், நிலையானதோர் அரசாங்கத்தை அமைப்பதற்குரிய வலிமை தேசிய முன்னணிக்கு மட்டுமே இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

  தேசிய முன்னணியிடம் இருந்த சிறிய தவறுகளைச் சரி செய்வதற்கு அவகாசம் கொடுக்காமலேயே எதிர்க்கட்சிக்கு வாக்களித்த தெமியாங் சட்டமன்றத்தின் வாக்காளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தேர்தலுக்காக வாக்கு கேட்டு வந்தவர்கள், இங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலைக்குண்டான சேவைகளை செய்வதில் தவறிவிட்டனர் என்பதைக் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என நேற்று முன்தினம் தாமான் ஸ்ரீ பூலாய் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற இன்னிசை இரவில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வ உரையாற்றிய் பின்னார் டான்ஸ்ரீ கேவியஸ் கவலை தெரிவித்தார்.

  பிஎஸ்கேதி எனப்படும் சிரம்பான் தமிழர் சமூகநல அமைப்பின் தலைவரும் மைபிபிபி லிம்போக் தொகுதித் தலைவருமான கருணாகரன் இன்னிசை இரவு என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். 

  உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மலேசியா உருவெடுக்கவிருக்கின்றது. இதை விரும்பாதவர்களாக எதிர்க்கட்சியினர் நடந்து கொள்கின்றனர். இதைக் கண்கூடாகவே நாம் பார்த்தும் கேட்டும் படித்தும் வருகிறோம். இவர்களின் நடவடிக்கை மக்களின் நேர்மறை சிந்தனையில் எதிர்மறை சிந்தனைகளை அளவில்லாமல் அள்ளித் தெளிக்கின்றனர். 

  தெமியாங் சட்டமன்றத் தொகுதி இப்போது ஜசெகவிடம் உள்ளது. இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று இங்குள்ள தேமு தலைவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். 

  14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. மக்களை எப்படி ஏமாற்றுவது என்று இந்நேரம் திட்டம் தீட்டியிருப்பார்கள். ஆனால், எல்லாம் தெரிந்தும் நம்மவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்குத்தான் ஆதரவு கொடுக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என டான்ஸ்ரீ கேவியஸ் 200க்கும் மேற்பட்ட வட்டார மக்களின் முன்னிலையில் கூறினார். 

  மைபிபிபி லிம்போக் கிளையின் தலைவர் கருணாகரன் இங்குள்ள தேமு கட்சிகளுடன் இணைந்து பணிபுரிகிறார் என அதன் தலைவர்கள் கூறுகிறார்கள். அம்னோ அலுவலகத்தில் கருணாவின் கால் படாதே நாள்களே இல்லை. காரணம், மக்களின் பிரச்சினைகளை அதிகமாக கொண்டு அதற்கு தீர்வு காண்கிறார். அவருக்கு இவ்வேளையில் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ கேவியஸ் சொன்னார். 

  தெமியாங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணியிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அங்குள்ள பொதுமக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் தேமுவை ஆதரிக்க நேர்மறையான சிந்தனைகளை வாக்காளர்களிடையே பதிய செய்ய வேண்டும். தேமுவின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் மேற்கொள்ளும் திட்டங்களை தவறாக சித்திரிக்கும் எதிர்க்கட்சிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் தேமுவின் உறுப்புக் கட்சிகள் தெமியாங்கில் நேற்று முன்தினம் இரவு களமிறங்கினர். 

  மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அவர்களின் வருகை, இங்குள்ள தேமு உறுப்புக் கட்சி தலைவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லை.  மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரே முன்வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வரலாற்றுப்பூர்வமானது. அதோடு, மைபிபிபி தொகுதி உறுப்பினர் களுக்கு உற்சாக வார்த்தகளையும் பகிர்ந்து கொண்டது அவர்களுக்கு மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்று லிம்போக் கிளைத் தலைவர் கருணாகரன் தாய்மொழியிடம் கூறினார். 

  பின்செல்