அதிபர் டிரம்பின் இரகசிய மடிக்கணினி களவு

அதிபர் டிரம்பின் இரகசிய மடிக்கணினி களவு

20/03/2017

img img

நியூயார்க், மார்ச் 20: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரகசிய தகவல்கள் அடங்கிய மடிக்கணினி ஒன்று நியூயார்க் நகரில் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காணாமல் போன இந்த மடிக்கணினி இரகசியப் புலனாய்வு பிரிவு பிரதிநிதியின் காரிலிருந்து களவாடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணினியைத் திருடிய நபர்களை கைது செய்வதற்காக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு, விரிவான விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. 

அமெரிக்க அதிபருக்கு சொந்தமான 'டிரம்ப் டவர்' கட்டடத்தின் முக்கிய திட்டங்கள், ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் தொடர்பான பிரச்சினை குறித்த விசாரணை அறிக்கை, அரசதந்திரத் தகவல்கள் அந்த மடிக்கணினியில் இருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது.

பின்செல்