ஃப்ளாஷ் நியூஸ்

அமெரிக்காவை ஒன்றிணைக்க இணைந்து பணியாற்றுவோம்: ஹிலாரி பேச்சு

அமெரிக்காவை ஒன்றிணைக்க இணைந்து பணியாற்றுவோம்: ஹிலாரி பேச்சு
img img

வாஷிங்டன், மார்ச் 20:அமெரிக்காவை ஒன்றிணைக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளாராம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது: 

"நான் காயங்களிலிருந்து வெளியே வந்து பொதுவெளியில் அமெரிக்க மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் நடந்த வன்முறைகளை செய்திகளில் பார்த்த நாட்கள் கடினமானவை. அப்போது எனது பெரும்பாலான நண்பர்களின் மனநிலையில்தான் நானும் இருந்தேன். பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கும் நமது தேசத்தை ஒன்றிணைக்க இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.

தற்போதைய அமெரிக்க நிலவரம் குறித்து ஹிலாரி பேசியிருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பின்செல்