ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இந்தியரை தாக்கிய அமெரிக்கர் மீது இனவெறி குற்றச்சாட்டு பதிவு

  இந்தியரை தாக்கிய அமெரிக்கர் மீது இனவெறி குற்றச்சாட்டு பதிவு

  20/03/2017

  img img

  வாஷிங்டன், மார்ச் 20: அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் இந்தியரை தாக்கிய அமெரிக்கர் மீது இனவெறி குற்றச்சாட்டு பதிவு செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சேர்ந்த அங்கூர் மேத்தா பென்சில்வேனியாவில் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 22ஆம் தேதி சவுத் ஹில்ஸ் வில்லேஜில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றார். அந்தச் சமயத்தில் அதே உணவகத்துக்கு பெத்தேல் பார்க் பகுதியில் வசித்து வரும் ஜெப்ரி ஆலன் பர்ஜெஸ் என்பவரும் வந்தார். உணவகத்தில், மேத்தாவுக்கு அருகில் அமர்ந்த பர்ஜெஸ் அவரை முஸ்லிம் என்று தவறுதலாக நினைத்து கொண்டார். பின்னர், திடீரென மேத்தாவை அவமரியாதை செய்ய தொடங்கினார். "உங்களை போன்றவர்கள் பக்கத்தில் அமர நான் விரும்பவில்லை" என்று கூறியதுடன் தொடர்ந்து மேத்தாவின் தலையில் பர்ஜெஸ் அடித்துள்ளார். 

  இதனைப் பார்த்த உணவகப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெத்தேல் பார்க் காவல்துறையினர் மேத்தாவை மீட்டு சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், பர்ஜெஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். 

  அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்திய வம்சாவளி மேத்தாவை தாக்கிய ஆலன் பர்ஜெஸ் மீதான குற்றச்சாட்டை இனவெறி குற்றச்சாட்டாக அறிவித்தார். இந்த வழக்கில் பர்ஜெஸ் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை அல்லது 2.50 லட்சம் டாலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

  பின்செல்