இளம் வயதில் தாயாகும் இங்கிலாந்து சிறுமி

இளம் வயதில் தாயாகும் இங்கிலாந்து சிறுமி
img img

லண்டன், மார்ச் 20: இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள்.

கடந்த 2014ஆம் ஆண்டு இவள் குழந்தை பெற்றாள். அக்குழந்தையின் வயது 3. தெரசா தற்போது 2ஆவது குழந்தையை பெற தயாராக இருக்கிறார்.

பின்செல்