ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கிராமத்து பொண்ணாக ஹன்சிகா?

  கிராமத்து பொண்ணாக ஹன்சிகா?

  20/03/2017

  img img

  ‘குட்டிப்புலி’ படத்தில் முத்தையாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் எம்.சசிகுமார். அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கொம்பன், விஷால் நடித்த மருது ஆகிய படங்களை இயக்கினார் முத்தையா. இவற்றில் கொம்பன் நல்ல வெற்றியையும், மருது மோசமான தோல்வியையும் சந்தித்தன.

  அது மட்டுமல்ல, இந்த இரண்டு படங்களுமே இயக்குநர் முத்தையா மீது சாதி வெறியர் என்ற முத்திரையை குத்தப்பட காரணமாக அமைந்தன. அதனாலேயே அவருக்கு காலஷீட் தர சம்மதித்திருந்த சூர்யாவும், விஷாலும் பின்வாங்கிவிட்டனர் என்ற பேச்சு எழுந்தது.

  இந்நிலையில்தான் முத்தையாவை அழைத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சசிகுமார். முத்தையா இயக்கத்தில்  சசிகுமார் மீண்டும்  நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கொடிவீரன்’ எனப் பெயரிட்டிருக்கிறது. 

  வழக்கம்போல் இயக்குநர் முத்தையா தனது பாணியிலேயே இப்படத்தையும் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியிலேயே உருவாக்க விருக்கிறாராம். ஆனால் தப்பித்தவறி கூட சாதி பற்றிய விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் சசிகுமார். இதற்காக தற்போது மேலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்குத் தோதான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

  இந்நிலையில், இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுன்னர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மார்க்கெட் இழந்துவிட்ட ஹன்சிகா சம்பள விஷயத்தில் கறார் தனத்தைக் காட்டாமல், சசிகுமாருடன் நடிக்க தயாராகிவிட்டாராம்.  

   

  பின்செல்