ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மகுடம் சூடிய மகாராஜ் தென் ஆப்ரிக்க அணி வெற்றி

  மகுடம் சூடிய மகாராஜ் தென் ஆப்ரிக்க அணி வெற்றி

  20/03/2017

  img img

  வெலிங்டன், மார்ச்.20: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சுழலில்’ அசத்திய மகாராஜ், 6 விக்கெட் வீழ்த்தினார்.

  நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இருஅணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 268ரன்கள் எடுத்தது. 2ஆவது நாள் முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 349 ரன்கள் எடுத்து, 81 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது.

  மூன்றாவது நாள் ஆட்டத்தில் மார்னே மார்கல் (40) அவுட்டாக தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில், 359 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிலாண்டர் (37) அவுட்டாகாமல் இருந்தார்.

  பின், 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை துவக்கியது நியூசிலாந்து. ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் லதாம் (6), கேப்டன் வில்லியம்சன் (1), புரூம் (20) என, மூவரும் மார்னேமார்கல் ‘வேகத்தில்’வீழ்ந்தனர். அடுத்து மகாராஜ் ‘சுழல்’ பெரும் தொல்லையாக அமைந்தது. இவரிடம், நிக்கோல்ஸ் (7), நீஷம் (4), அரைசதம் அடித்த ராவல் (80) சிக்கினர். பின் வரிசையில் கிராண்ஹோம் (0), சவுத்தீ (4), வாட்லிங் (29) என, வரிசையாக மகாராஜிடம் சரிந்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 171 ரன்னுக்கு சுருண்டது. மகாராஜ் 6, மார்கல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

  பின் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு குக் (11), எல்கர் (17) ‘ஷாக்’ கொடுத்தனர். இருப்பினும், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றே நாட்களில் வெற்றி பெற்றது. ஆம்லா (38), டுமினி (15) அவுட்டாகாமல் இருந்தனர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் சாய்த்த மகாராஜ், ஆட்ட நாயகனாக மகுடம் சூடினார்.

  தற்போது தென் ஆப்ரிக்க அணி 1&0 என, தொடரில் முன்னிலை பெற்றது.

  பின்செல்