சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பிப்ரவரி 15 முதல் வெ. 20 கட்டணம்

சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களுக்கு  பிப்ரவரி 15 முதல் வெ. 20 கட்டணம்

17/01/2017

img img

சிங்கப்பூர், ஜன. 17:

பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி துவாஸ் அல்லது வூட்லெண்ட்ஸ் சோதனை சாவடிகளிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வரும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்திற்கும் 20 வெள்ளி (6.40 சிங்கப்பூர் டாலர்) கட்டணம் விதிக்கப்படும் என்று அந்நாட்டின் தரைவழி போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்ஆர்சி எனப்படும் அந்தப் புதிய கட்டண நடைமுறை ஏற்கெனவே அமலில் இருந்து வாகன நுழைவு அனுமதி (விஇபி), டோல் கட்டணங்கள், நிலையான மின்னணு சாலை விலை (இஆர்பி) ஆகிய கட்டணங்களுக்கு முன் விதிக்கப்படும். அதாவது, வாகனங்கள் சோதனை சாவடிகளிலிருந்து  வெளியேறும் முன்னர், அக்கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்னதாக, ஜோகூருக்குள் நுழையும் மலேசிய பதிவு எண் கொண்டிராத வாகனங்களுக்கு தலா 20 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படும் எனும் நடைமுறை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அமல்படுத்தப்பட்டது. இதன் பிரதிபலிப்பாகவே சிங்கப்பூர் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.  

ஆர்ஆர்சி கட்டணத்தைச் செலுத்தத் தவறும் வாகனங்களுக்கு தலா 50 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 100 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும், அபராதங்களை செலுத்தத் தவறினால், 1,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 3 மாதம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பின்செல்