ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?

  வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?

  10/01/2017

  img img

  கோலாலம்பூர், ஜன. 10: மலேசியாவில் வணிகம் செய்யும் நிறுவனங்களில் சில, அடுத்த 12 மாதங்களில் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த பச்சைக்கொடி காட்டியுள்ளன. கிராண்ட் தார்ன்டன் அனைத்துலக வர்த்தக ஆய்வு அறிக்கையின் (ஐபிஆர்) வழி அத்தகவல் வெளிவந்துள்ளது. 

  நம்பிக்கை குறைவான கண்ணோட்டத்திற்கிடையிலும் ஊழியர்களின் சம்பளம் உட்பட இதர பொருளாதார அடிப்படை குறிகளான வருமானம், ஏற்றுமதி, விற்கும் விலைகள், வேலை வாய்ப்பு, ஆதாயம் போன்றவை மேம்பாடுகளைக் குறிப்பதாக அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

  ஆசிய வட்டாரத்தில் அதிக அளவிலான வர்த்தகங்களைக் கொண்டுள்ளதால், அடுத்த 12 மாதங்களில் மலேசியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

  மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களில் 86 விழுக்காடு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளிக்க திட்டமிட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இவ்வெண்ணிக்கை வெறும் 78 விழுக்காடாக மட்டுமே இருந்தது. 

  இதனிடையே, ஏற்ற இறக்கமாக இருந்து வரும் பரிமாற்ற விகிதங்கள் மலேசியாவில் இயங்கும் வர்த்தக நிறுவனங்களின் விரிவாக்கத்தில் மிகப் பெரிய தடைகல்லாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  பின்செல்