தவறான கருத்தை ஒப்புக்கொண்டார் டத்தோ நஸ்ரி

தவறான கருத்தை ஒப்புக்கொண்டார் டத்தோ நஸ்ரி
img img

பெட்டாலிங் ஜெயா, அக். 1: விஸ்மா புத்ரா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர், வெளியுறவு துணை அமைச்சருக்கான ஒப்புதல் வழங்கியதை தாம் அறியவில்லை. தாம் அது குறித்து ஒரு விவரமும் அறியாத பட்சத்திலே தவறாக கருத்துரைத்துவிட்டதாக சுற்றுலா, கலாச்சார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் ஒப்புக்கொண்டார்.

சீனத் தூதரை அழைக்க துணை அமைச்சருக்கான அதிகாரத்துவம் இல்லை என்ற அடிப்படையிலே தாம் கருத்துரைத்ததாகவும், விஸ்மா புத்ராவிற்கு டாக்டர் ஹுவாங் ஹுய் காங் எவ்வித வருத்தமுமின்றி வருகை மேற்கொள்ளலாம் என்றார்.

அவர் வெளியிட்ட அறிக்கை குறித்த விளக்கத்தை பெறும் பொறுப்பு விஸ்மா புத்ராவுக்கே உள்ளது. அதன் விவகாரத்தில் தலையிடுவதற்கான நோக்கம் தமக்கு இல்லை. இதனிடையே, சீனத் தூதர் விஸ்மா புத்ராவிற்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து நஸ்ரி வெளியுறவு துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரிஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான் விதிமுறையைப் பின்பற்றவில்லை, தூதரை அழைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என சாடினார். தற்போது ரிஸால் மெரிக்கான் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு பின்னரே வெளியுறவு அமைச்சர் சீனத் தூதரை அழைக்க தமக்கு ஒப்புதல் வழங்கியதாகக் கூறினார். மேலும், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹனிஃபா அமான் அமைச்சர்கள் இவ்விவகாரத்தில் நெருக்குதல் கொடுப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். எனவே, விஸ்மா புத்ரா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சின் உத்தரவை அறியாத நிலையில் தவறாக கருத்துரைத்துவிட்டதாக டத்தோ நஸ்ரி வருத்தம் தெரிவித்தார்.

 

பின்செல்