மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைந்து சம உரிமையையும் பொருளாதாரத்தையும் நிலைநாட்ட உறுதி செய்வோம் டத்தோஸ்ரீ ரொஹானி வலியுறுத்து

மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைந்து சம உரிமையையும் பொருளாதாரத்தையும் நிலைநாட்ட உறுதி செய்வோம் டத்தோஸ்ரீ ரொஹானி வலியுறுத்து
img img

புத்ராஜெயா, செப்.30: பெண்களின் சம உரிமை, பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஐநா மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியிருந்ததை மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு ஆதரிப்பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரொஹானி அப்துல் கரிம் கூறினார்.

பிரதமரின் ஆலோசனையை வரவேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மகளிர் சட்டத்திட்டத்தை வரைய உதவ வேண்டும் என மகளிர் ஆலோசனை மன்றத்தின் கூட்டத்தில் அவர் சொன்னார். 

இந்தக் கூட்டத்தில் அனைத்துலக நிலையில் வறுமை நிலையில் வாழும் மகளிருக்கான தீர்வை ஏற்படுத்த வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் அறிக்கையைத் தயார் செய்வது குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் இவ்வாண்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தன்று நியமிக்கப்பட்ட ஆலோசனை மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்களின் கருத்துகளை ஒன்றிணைக்கும் சிறந்த தளமாக மகளிர் ஆலோசனை மன்றம் அமைந்துள்ளது. ஆகையால், இம்மன்றத்தின் வழி, பெண்களுக்கான சட்டத்திட்டங்கள், சம உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

பின்செல்