வெற்றி அனைவரும் வேண்டும் வரம். தோல்வி அனைவரும் வேண்டா வரம். தோல்வியைச் சந்திக்காத வெற்றியில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் ஓடும் முன்னர், மண்டியிட்டு அமர்ந்திருக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டாலே வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன என்ற புரிதல் பிறந்துவிடும்.
எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!
வெற்றியும் தோல்வியும் நமது இரு கால்களப் போல. மாறி மாறி அடி எடுத்து வைத்தால் தான் முன்னேறிச் செல்ல முடியும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நம்பிக்கை அனைவருக்கும் வேண்டிய ஒன்று. ஆனால், வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி செல்ல எதை நம்ப வேண்டும், நம்பக் கூடாது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை மிகவும் முக்கியம், இலக்கை துரத்தி செல்லாமல், அவ்விலக்கு உங்களைத் துரத்தச் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வேலைய நீங்கள் செய்து வந்தால் ஒரு போதும் சோர்வு ஏற்படாது. முதலில் உங்களுக்குப் பிடித்த வேலையை செய்யத் தொடங்குங்கள். வெற்றிகள் உங்களது காலுக்கு கீழ் அணிவகுக்கும்.
பணம் வேறு, சந்தோஷம் வேறு என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். பலரும் பணம் இருந்தால் சந்தோஷம் வந்துவிடும் என தங்களுக்கு ஒத்துவராத வேலைகளச் செய்து வருகிறார்கள். பணம் நிலையற்ற செல்வாக்கை மட்டுமே தரும். சந்தோஷம் உங்கள் கையில் தான் இருக்கிறது. பணத்தை ஏந்துவதற்காக உங்கள் கையில் இருக்கும் சந்தோசத்தைக் கீழே போட்டு உடைத்துவிட வேண்டாம்.
பெரும்பாலும் நம்மில் பலர் செய்யும் தவறு, சிறிய விஷயங்களில் கோட்டை விடுவது. எனவே, சிறிது, பெரிது என ஏதும் இல்லை அனைத்தும் சமம் என்பதை உணரத் தொடங்குங்கள்.
நீங்கள் விரும்பும் ஒன்றையே நீங்கள் பயந்து, பயந்து விரும்பினால். பின் வேறு எதில் நீங்கள் தைரியமாக செயல்பட முடியும். எங்கு பயம் மறைகிறதோ அங்கு தான் மகிழ்ச்சி பிறக்கும்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அந்த நிலையை நீங்கள் நம்ப வேண்டும். துன்பம், இன்பம், சமநிலை என உங்கள் வாழ்க்கையில் எந்த சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் உங்கள் நிலையை, உள்ளது உள்ளபடி நம்ப வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டால் தான் வெற்றியை அடுத்த முறையாவது ருசிக்க முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மற்றவரிடம் உதவி கேட்கும் முன்னர், அதை ஏன் நான் செய்ய முடியாது என்ற என்ன வேண்டும். மற்றவரது உதவியும் வேண்டும் தான். ஆனால், அதற்கு முன்பு உங்களால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.
வாய்ப்புகள் சிலருக்கு அமையும், சிலர் அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தமுறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் வேண்டாம். வாழ்க்கை வீடியோ கேம் அல்ல.
எந்த ஒரு காரியமும் தேவையின்றி நடப்பது இல்லை. எனவே, தோல்வி ஆயினும், வெற்றி ஆயினும் எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் வேண்டும். மனதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று.
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் எனில், முதலில் எதிர்மறை எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும். உங்களது வெற்றியை மறைக்கும் பெரிய தடை, முடியாது என்ற எண்ணம் தான்.
உதவி கிடைத்து பலனடைந்தவுடன் நன்றி மறந்துவிட வேண்டாம். மீண்டும் ஓர் நாள் உங்களது உதவி அவருக்கும், அவருடைய உதவி உங்களுக்கும் இதைவிட பெரிய அளவில் தேவைப்படும் தருணங்கள் ஏற்படும். நன்றி மறப்பது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை.
யாராலும் பயனைத் தர முடியாது என்பதை உணருங்கள். உங்களது வேலையில் சிறிய தொய்வு ஏற்படுகிறது என்றால் கூட ஓய்வெடுங்கள். மேலாண்மை உங்களது சிறிய தொய்வைக் கூட பெரிய தோல்வி என்று தான் கூறும். ஓய்வு அனைவருக்கும் முக்கியமான ஒன்று.
உங்களை ஒருவர் முந்திச் செல்கிறார் என்றால் அவரைத் தாண்டி முன்னேறிச் செல்ல பயிற்சி மேற்கொள்ளுங்கள். அவரது முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம். இது, உங்களது சிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
காரத்தைச் சுவைக்காமல் ஒருவரால் என்றும் இனிப்பின் முழு சுவை என்ன என்பதை உணர முடியாது. அது போலத் தான் வெற்றியும், தோல்வியும். வாழ்க்கையை முழுமையாக சுவைக்க வெற்றிக்கு நிகரான தோல்வியையும் சந்திக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவும் வேண்டும்.